குடியுரிமை சட்டத்தை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் பஸ்கள் மீது கல்வீச்சு; 3 ஆயிரம் பேர் கைது
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வஞ்சித் பகுஜன் அகாடி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. ஒரு சில இடங்களில் பஸ் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போராட்டம் நடத்திய 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொருளாதார மந்தநிலையை கண்டித்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி அழைப்பு விடுத்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் ஆதரவு தொிவித்து இருப்பதாக வஞ்சித் பகுஜன் அகாடி தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மும்பையை பொறுத்தவரை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. மும்பையில் பஸ், ஆட்டோ, டாக்சி மற்றும் மின்சார ரெயில், மெட்ரோ, மோனோ ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன. செம்பூரில் மட்டும் மர்மநபர் பெஸ்ட் பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் பஸ் டிரைவர் விலாஸ் தாபடே காயமடைந்தார்.
இதேபோல சோலாப்பூர் மற்றும் அவுரங்காபாத் பகுதிகளில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது. தானே உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
முழு அடைப்பை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மும்பையில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது:-
போராட்டத்தின் மூலம் என்ன சொல்லவேண்டும் என நினைத்தோமோ அது மக்களை சென்றடைந்து விட்டதாக நினைக்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் எங்களது கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஆதரவு அளித்தன. போராட்டம் வெற்றி கண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story