குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, செல்போனில் லைட் அடித்து இஸ்லாமியர்கள் நூதன போராட்டம் - வேல்முருகன் பங்கேற்பு


குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, செல்போனில் லைட் அடித்து இஸ்லாமியர்கள் நூதன போராட்டம் - வேல்முருகன் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 3:45 AM IST (Updated: 26 Jan 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் செல்போனில் லைட் அடித்து இஸ்லாமியர்கள் நூதன போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்றார்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் பாக்கர்அலிசாஹீப் தலைமை தாங்கினார். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அய்யா தர்மயுகவழி பேரவை தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் சுந்தரவள்ளி உள்பட பல்வேறு கட்சி, பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் செல்போனில் லைட் அடித்து அதனை உயர்த்தி காண்பித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story