முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் 7-ந் தேதி அயோத்தி பயணம் சஞ்சய் ராவத் தகவல்


முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் 7-ந் தேதி அயோத்தி பயணம்  சஞ்சய் ராவத் தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2020 3:30 AM IST (Updated: 26 Jan 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் மாதம் 7-ந் தேதி அயோத்திக்கு சென்று ராமரை வழிபடுவார் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வரும் மார்ச் மாதம் 7-ந் தேதி அயோத்திக்கு சென்று ராமரை வழிபடுவார் என அக்கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த பிறகு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமரை தரிசிப்பதுடன், சாராயு நதிக்கரையில் ஆரத்தி பூஜையும் செய்வார்.

இந்த பயணம் அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் தொடர்புடையது. இதில் அரசியல் சாயம் பூசவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அயோத்திக்கு உத்தவ் தாக்கரே அழைத்து செல்ல வேண்டும் என்ற பாரதீய ஜனதா விமர்சனம் செய்து இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், “ராமர் கோவில் விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றுள்ளது. பாரதீய ஜனதாவின் விமர்சனங்களை கண்டுகொள்ள தேவையில்லை” என்றார்.

Next Story