சிறந்த முறையில் பணியாற்றிய டிரைவர்களுக்கு பரிசு: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி சிறந்த முறையில் பணியாற்றிய டிரைவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருப்பூர்,
திருப்பூா்-பல்லடம் ரோட்டில் உள்ள அருள்புரம் டி.ஆர்.ஜி. மண்டபத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் விபத்து இல்லாமல் சிறந்த முறையில் வாகனம் ஓட்டிய அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு சுமார் 20 சதவீதம் விபத்து குறைந்துள்ளது. மத்திய அரசின் சிறந்த விருதினையும், தமிழகம் பெற்றுள்ளது.
மாணவ-மாணவிகள் வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். விபத்துகளை குறைக்க வேண்டும். மேலும், பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை நேரங்களில் சிரமம் இன்றி பஸ்சில் மாணவ-மாணவிகள் பயணம் செய்ய போக்குவரத்துத்துறை மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 118 மாணவ-மாணவிகள் மற்றும் சிறந்த முறையில் வாகனம் ஓட்டிய 24 அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமார் (திருப்பூர் வடக்கு), முருகானந்தம் (தெற்கு) உள்பட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story