மாவட்ட செய்திகள்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து, 32 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் + "||" + 32 for free heart surgery for children They were sent to Madras

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து, 32 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து, 32 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் இருந்து 32 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவாரூர், 

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை தனியார் மருத்துவமனை இணைந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதயம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான முகாம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 8-ந் தேதி நடந்தது. முகாமில் பிறந்த குழந்தை முதல் 14 வயதுக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலவச பரிசோதனை செய்து கொண்டனர். இதில் உயர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 32 குழந்தைகள் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தனி வாகனம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகுமரன், குழந்தைகள் சென்ற வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 32 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக நடைபெற உள்ளதுஇந்த குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். முன்னதாக சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகளை கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு அனைவரும் பூரண குணம் பெற்று திரும்ப வேண்டுமென வாழ்த்தி இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

இதில் துணை முதல்வர் ராஜாராம், டாக்டர்கள் தர்மராஜா, பாஸ்கரன், சரண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.