மாவட்ட செய்திகள்

சேரன்மாதேவி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் வியாபாரி ச் + "||" + Near Cheranmadevi Munvirotat cut by scythe The milk merchant dies

சேரன்மாதேவி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் வியாபாரி ச்

சேரன்மாதேவி அருகே முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் வியாபாரி ச்
சேரன்மாதேவி அருகே மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால்வியாபாரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி மேலதெற்கு தெருவை சேர்ந்த அழகு மகன் அம்பலம் என்ற குமார்(வயது36). பால் வியாபாரி. இவரை, கடந்த 18-ந் தேதி சேரன்மாதேவி ராமசாமி கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சிலர் அரிவாவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். முன்விரோதத்தில் அவர் வெட்டப்பட்டதாக கூறப்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சேரன்மாதேவி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் அதே ஊரை சேர்ந்த 17 வயதுடைய வாலிபர்கள் 4 பேர் மற்றும் கீழநடுத்தெரு சங்கரபாண்டி மகன் கார்த்திக்ராஜா(21), மூலகோவில் தெரு மாரியப்பன் மகன் செல்வகுமார்(20), செல்லப்பாண்டி மகன் மாதேஷ்(20) ஆகிய 7 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர் இறந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். 

இறந்த குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கீழ்பென்னாத்தூரில் கலவரம்: முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; வீடுகள், கார், மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
கீழ்பென்னாத்தூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள், கார், மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமானது.
2. சேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3. காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
4. முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. ராமநாதபுரத்தில் பயங்கரம்: முன்விரோதத்தில் வாலிபர் எரித்துக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது
ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை