மாவட்ட செய்திகள்

அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி + "||" + BJP does not have faith in the Constitution - Siddaramaiah Interview

அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி

அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி
அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இது தக்க பாடமாக அமையும். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டும்.

கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயங்களில் கட்சி மேலிடம் சரியான முடிவு எடுக்கும். நமது தேசத்திற்காக ஏராளமானவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. நமது அரசியல் சாசனம் மிக சிறப்பானது.

பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அம்பேத்கர் உருவாக்கிய இந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பணியை செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு ஆபத்தில் உள்ளது என்று சித்தராமையா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது - மேயர்- சுவர்ணா சங்கர், துணை மேயர்- சுரேகா
சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியுள்ளது. மேயராக சுவர்ணா சங்கரும், துணை மேயராக சுரேகாவும் தேர்வாகி உள்ளனர்.
2. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி
சிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
3. மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மோதல்
மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சட்டை காலரை பிடித்து சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் சேர்ந்தது ஏன்? - அஜித்பவார் பதில்
ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் சேர்ந்தது ஏன் என்பது குறித்து அஜித்பவார் பதில் அளித்துள்ளார்.