தமிழை செம்மொழியாக அங்கீகரிக்க பாடுபட்டவர் கருணாநிதி - ஆ.ராசா எம்.பி. பேச்சு


தமிழை செம்மொழியாக அங்கீகரிக்க பாடுபட்டவர் கருணாநிதி - ஆ.ராசா எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 11:58 PM GMT)

தமிழை செம்மொழியாக அங்கீகரிக்க பாடுபட்டவர் கருணாநிதி என்று கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார்.

கோவை,

தி.மு.க. சார்பில்மொழிப்போர்தியாகிகள் நினைவு வீரவணக்கநாள்பொதுக்கூட்டம் கோவைகாந்திபுரத்தில்நடைபெற்றது. மாநகர்மாவட்ட பொறுப்பாளர்நா.கார்த்திக்எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி.கலந்து கொண்டுபேசியதாவது:-

1931-ம் ஆண்டு முதல் இந்திஎதிர்ப்பு போராட்டம்நடைபெற்று வருகிறது. தமிழ்மொழிக்காகஏரா ளமானோர்தீக்குளித்து இறந்து உள்ளனர். பெரியார் கடவுள்மறுப்பு கொள்கையைகடைபிடித்தபோதிலும், இந்தி எதிர்ப்புமாநாட்டிற்கு தலைமைதாங்கமறைமலைஅடிகளாரை அழைத்தார்.

இந்தி திணிப்பிற்குஎதிராக சாதி, மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினர். இதுபோன்ற வரலாறு தெரியாமல் நடிகர்ரஜினிகாந்த்பேசி விட்டார்.

அனைவரையும்படிக்க வைத்துடாக்டராகவும்,என்ஜினீயர்களாகவும்ஆக்கியது திராவிடம். இன்று நமது கைகளுக்குஇணையசேவைவந்து விட்டது. ஆனால் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் சுடுகாட்டில்சாதி பார்க்கும்அவலம் உள்ளது.

தமிழைசெம்மொழியாகஅங்கீகரிக்க பாடுபட்டவர் முன்னாள் முதல்- அமைச்சர்மு.கருணாநிதி. ஹீப்ரு,லத்தீன்,சமஸ்கிருதம்உள்ளிட்ட செம்மொழிகள் மக்களால்பேசப்படாதமொழிகளாக உள்ளன. ஆனால்தமிழ்மொழி தான்இன்று பல நாடுகளில்உள்ள தமிழர்களால்பேசப்படுகிறது.

2,400 பேர் பேசும்சமஸ்கிருதத்திற்குமத்திய அரசுரூ.150 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால் தமிழ்மொழிக்கு சில லட்சங்கள் மட்டும் நிதியாகஒதுக்கி தமிழைவஞ்சிக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் 9.9சதவீதமாகஇருந்தது. ஆனால் தற்போது அது 4.5சதவீதமாககுறைந்து விட்டது.

தென்னாடுடையசிவனே போற்றி,எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி என்று சிவனை வணங்கியது தமிழ். எனவேதஞ்சை பெரியகோவிலுக்குதமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கணபதி தினேஷ்குமார், சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story