மாவட்ட செய்திகள்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் தர்ணா போராட்டம் + "||" + Before the Dharmapuri Collector's Office Health nurses struggle darna

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி கனகவள்ளி தலைமை தாங்கினார். மாதம்மாள் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணம்மாள் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கூட்டமைப்பின் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிராமசுகாதார செவிலியர்கள், பகுதிநேர சுகாதார செவிலியர்கள் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகளை திரும்ப பெற வேண்டும்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கிராமசுகாதார செவிலியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பொது சுகாதாரத்துறையின் ஆணிவேராக விளங்கி களப்பணியாற்றும் சுகாதார செவிலியர்களுக்கு பணிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.