கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு சாவு
கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர்.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் போரிவிலி- தகிசர் இடையே தகிசர் ஆற்று பாலம் அருகில் நேற்று முன்தினம் மாலை தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 2 பேரும் ரெயில் விபத்தில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் போரிவிலி மேற்கு ஐ.சி. காலனியில் உள்ள கணபதி பாட்டீல் குடிசை பகுதியை சேர்ந்த சோட்டு ரமேஷ்(வயது19), ஈர்வர் சங்கர் (22) என்பது தெரியவந்தது.
இதுபற்றி ரெயில்வே போலீசார் கூறுகையில், “பலியான 2 வாலிபர்களும் தகிசர் ஆற்று பாலத்திற்கு கீழ் வந்து கஞ்சா புகைப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். சம்பவத்தன்று வாலிபர்கள் கஞ்சா போதை அதிகமாகி மயக்கத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கி உள்ளனர். அப்போது, அவர்கள் மின்சார ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். இதனை சிலர் நேரில் பார்த்து உள்ளனர்” என்று கூறினர்.

Related Tags :
Next Story