மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம் + "||" + Against the Citizenship Act Nakpata Muslim women Continuous struggle

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,

டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. 40 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர். இதே போன்ற போராட்டம் நேற்று முன்தினம் இரவு முதல் மும்பை நாக்பாடா பகுதியில் உள்ள மோர்லேண்டு ரோட்டில் தொடங்கி உள்ளது.


இந்த போராட்டத்தில் அக்ரிபாடா, மதன்புரா, ஜூலா மைதான் மற்றும் மத்திய மும்பை பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்து- முஸ்லிம் சகோதரத்துவத்தை பற்றியும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தை கைவிடுமாறு உயர் போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி பாணியில் மும்பையிலும் பெண்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.