ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அவுரித்திடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் போலீஸ் பன்னீர் வரவேற்றார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கூடாது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்ககூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில விவசாய அணி செயலாளர் விஜயன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜன், மேகநாதன், பன்னீர்செல்வம், இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், சத்தியேந்திரன், இளஞ் செழியன், ஞானவேல், பொருளாளர்கள் திருமலைச்சாமி, ரவி உள்பட தி.மு.க. வினர் பலர் கலந்து கொண்ட னர்.
முடிவில் நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story