ஏரியூர் அருகே, ஹெலிகாப்டர் பறந்ததை தொடர்ந்து வெடி சத்தம் - பொதுமக்கள் பீதி
ஏரியூர் அருகே ஹெலிகாப்டர் பறந்ததை தொடர்ந்து வெடி சத்தம் வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை, சின்னம்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. ஏதோ வெடித்தது போல் பயங்கரமாக அந்த சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்து பதறியடித்தபடி வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது வானில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து சென்றது. இதைத்தொடர்ந்து தான் அந்த சத்தம் கேட்டது தெரியவந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஏதேனும் வெடி விபத்து நிகழ்ந்ததா? அல்லது சத்தம் வர வேறு ஏதாவது காரணமா? என்று பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது-
பெரும்பாலை பகுதியில் மாலையில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மக்களுக்கு இந்த சத்தம் கேட்டதாக கூறுகிறார்கள். ஹெலிகாப்டர் சென்றதை தொடர்ந்து இந்த சத்தம் கேட்டது. நாங்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தோம். மர்ம சத்தம் எதனால் வந்தது என்பது எங்களுக்கு தெரியாமல் குழம்பி போய் உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story