மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும்: “5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது” - கனிமொழி எம்.பி. பேட்டி + "||" + Mental stress for students: "General Elections Unnecessary for Grades 5 and 8"

மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும்: “5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது” - கனிமொழி எம்.பி. பேட்டி

மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும்: “5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது” - கனிமொழி எம்.பி. பேட்டி
“5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது“ என்று கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் உடன்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
உடன்குடி,

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் பலமுறை வலியுறுத்தி பேசி உள்ளோம். இதுதொடர்பாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட முன்பு பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் ஒரு இடத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இது பல சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இங்கு கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பது அவசியமானது. இது இப்பகுதி வளர்ச்சி அடையவும் உதவும். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும். இதனை அரசு மூர்க்கத்தனமாக, கட்டாயமாக திணிப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையே பலரும் எதிர்த்து வரும் நிலையில், 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது - கனிமொழி எம்.பி.
இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
2. தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு; கனிமொழி எம்.பி. கிண்டல்
தமிழகம் முழுவதும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார்.
3. மராட்டியத்தில், பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் - கனிமொழி எம்.பி. பேட்டி
மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப்பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
4. சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்
சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏன்? என்பதற்கு கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்தார்.
5. ஆங்கிலம், இந்தியில் வங்கி பணியிட தேர்வு: மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி - கனிமொழி எம்.பி.,
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வங்கி பணியிட தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் என்பது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.