மாவட்ட செய்திகள்

கோழிக்கறி சமைத்து கொடுக்காததால் தொழிலாளி வி‌‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Since the chicken is not cooked The worker committed suicide by drinking

கோழிக்கறி சமைத்து கொடுக்காததால் தொழிலாளி வி‌‌ஷம் குடித்து தற்கொலை

கோழிக்கறி சமைத்து கொடுக்காததால் தொழிலாளி வி‌‌ஷம் குடித்து தற்கொலை
குத்தாலம் அருகே கோழிக்கறி சமைத்து கொடுக்காததால் தொழிலாளி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே திருமணஞ்சேரி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜா (வயது 22). கூலித் தொழிலாளி. கடந்த 26-ந் தேதி ராஜா, தனது தாய் கொளஞ்சியம்மாள் என்பவரிடம் கோழிக்கறி வாங்கி கொடுத்து சமைத்து கொடுக்கும்படி கூறினார். அதற்கு கொளஞ்சியம்மாள் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் கோழிக்கறியை சமைத்து கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜா, விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌‌ஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 27-ந் தேதி ராஜா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.