மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில், ஓடையில் பிணமாக மிதந்த தொழிலாளி - போலீஸ் விசாரணை + "||" + In Chidambaram, a body floating in a stream - police investigation

சிதம்பரத்தில், ஓடையில் பிணமாக மிதந்த தொழிலாளி - போலீஸ் விசாரணை

சிதம்பரத்தில், ஓடையில் பிணமாக மிதந்த தொழிலாளி - போலீஸ் விசாரணை
சிதம்பரத்தில் ஓடையில் பிணமாக மிதந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம், 

சிதம்பரம் வண்டிகேட் அருகே பாசிமுத்தான் ஓடையில் நேற்று காலை தண்ணீரில் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், சிதம்பரம் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு, அவர் யார் என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில், வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கலவை பகுதியை சேர்ந்த பாஸ்கர்(வயது 44) என்பதும், தெழியாளியான இவர் சிதம்பரத்தில் தங்கி கூலிவேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கர் குளிப்பதற்காக ஓடையின் உள்ளே ஆழம் தெரியாமல் இறங்கிய போது, தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை