மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் சந்தேகத்தால் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + 10 people hospitalized after suspected coronavirus virus

கொரோனா வைரஸ் சந்தேகத்தால் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனா வைரஸ் சந்தேகத்தால் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை,

சீனாவில் பலரின் உயிரிழப்புக்கு காரணமான கொரோனா வைரஸ் நோய் வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த நோய் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து மராட்டியம் வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தால், அவர்கள் உடனடியாக மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியிலும், புனே நாயர் ஆஸ்பத்திரியிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இதுகுறித்து மாநில நோய் கண்காணிப்பு துறை அதிகாரி டாக்டர் பிரதீப் அவ்தே கூறியதாவது:-

கடந்த 21-ந் தேதி சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. கடந்த 24-ந் தேதி இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் மும்பை மருத்துவமனையிலும், 3 பேர் புனேயிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் நாந்தெட்டில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 4 ஆயிரத்து 600 பேர் இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
2. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு: எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க ஜப்பான் திட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 1600 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1600 ஆக உயர்ந்துள்ளது.