சிக்பள்ளாப்பூர் அருகே கிராம பஞ்சாயத்து உறுப்பினரை கொல்ல முயற்சி


சிக்பள்ளாப்பூர் அருகே கிராம பஞ்சாயத்து உறுப்பினரை கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 30 Jan 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூர் அருகே, கிராம பஞ்சாயத்து உறுப்பினரை கொல்ல முயற்சி நடந்தது. இதற்கு முன்விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்பள்ளாப்பூர், 

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசகோட்டை தாலுகா தரபஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜ். இவர் தரபஹள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை தியாகராஜ் தனது மோட்டார் சைக்கிளில், தரபஹள்ளியில் இருந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டாவுக்கு சென்று கொண்டு இருந்தார். சிட்லகட்டா அருகே எச்.கிராஸ் பகுதியில் சென்ற போது தியாகராஜின் மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்கள் அவரிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், தியாகராஜின் முதுகில் கத்தியால் குத்தினார்கள். இதனால் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்த னர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதனை ெதாடர்ந்து தியாகராஜை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிட்லகட்டா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை மர்ம நபர்கள் கொல்ல முயன்றதாக போலீசாரிடம், தியாகராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முன்விரோதம் காரணமாக தியாகராஜை கொல்ல முயற்சி நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் தியாகராஜை கொல்ல முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story