நாகவேடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை தொடக்கவிழா - கலெக்டர் பங்கேற்பு


நாகவேடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை தொடக்கவிழா - கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 31 Jan 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

நாகவேடு கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவமனை தொடக்கவிழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி பங்கேற்றார்.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே நாகவேடு கிராமத்தில் இயங்கி வந்த கால்நடை கிளை மையம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனை தற்காலிகமாக கிராம சேவை மைய கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நேற்று நடைபெற்றது. 

கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிரு‌‌ஷ்ணன், உதவி இயக்குனர் பாஸ்கரன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரே‌‌ஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன் வரவேற்றார்.

விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி, வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்து செயல்பாடுகளை தொடங்கி வைத்தனர். 

விழாவில் அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாகவேடு ஊராட்சி செயலாளர் எஸ்.எஸ்.முனுசாமி நன்றி கூறினார்.

Next Story