ஸ்ரீபெரும்புதூர் அருகே, லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை மணிகண்டன் உடற்பயிற்சி கூடத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுகோட்டை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story