வரதராஜபுரம், சிங்கப்பெருமாள் கோவிலில் அம்மா திட்ட முகாம்
வரதராஜபுரம், சிங்கப்பெருமாள் கோவிலில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா, தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வரதராஜபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவி தொகை கேட்டு 11 மனுக்களும், கால்வாய் வசதி வேண்டி 2 மனுக்களும், இறப்பு சான்றிதழ் கோரி 2 மனுக்களும், ஊனமுற்றோர் சான்றிதழ் மற்றும் மின்கம்பி மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 19 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து தாசில்தார் பெற்றுக்கொண்டார்.
இதில் ஊனமுற்றோர் சான்றிதழ் கோரிய ஒரு மனுவுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதி மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் படப்பை வருவாய் ஆய்வாளர் பிரபு வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், அ.தி.மு.க. கிளை செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் கிராம நிர்வாக அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் சீனுவாசன், பெரிய மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுஸ் பாஷா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தனர்.
முகாமில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் குப்புசாமி மற்றும் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story