மன்னார்குடி, திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி, திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் வேலை வழங்கவும், ஓய்வூதிய பயன்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மன்னார்குடி கிளை மேலாளர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மன்னார்குடி அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் பிச்சைக்கண்ணு, செயலாளர் மணிகண்டன் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி ராஜ்குமார் நன்றி கூறினார்.
அதேபோல் திருவாரூர் தெற்குவீதியில் உள்ள ஒரு வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ராஜவேல் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் மாரியப்பன், குணசேகரன், தர்மதாஸ், கணேஷ், முத்துகுமார், அதிர்ஷ்டகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story