செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் - விழிப்புணர்வு பேரணி


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் - விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 1 Feb 2020 3:15 AM IST (Updated: 1 Feb 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மதுராந்தகம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பணிகள் குழு, போக்குவரத்து போலீசார், காவல்துறையினர் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மதுராந்தகம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மதுராந்தகம் குற்றவியல் நடுவர் திருமால், மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

அச்சரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து அரசினர் மேல்நிலைப்பள்ளி வரை பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர்விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இதில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story