ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தபால் நிலையம் முற்றுகை - 60 பேர் கைது


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தபால் நிலையம் முற்றுகை - 60 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 3:30 AM IST (Updated: 1 Feb 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமலும், மக்களின் கருத்துகளை கேட்டறியாமலும் செயல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் பழனிவேல், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story