பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தீ விபத்து; தேர் சட்டங்கள் தீயில் எரிந்து நாசம்


பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தீ விபத்து; தேர் சட்டங்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 Feb 2020 4:17 AM IST (Updated: 1 Feb 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், தேர் சட்டங்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பூதப்பாண்டி, 

பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்ட நிகழ்ச்சி 7-ந் தேதி நடக்கிறது. தேரோட்ட நிகழ்ச்சியின் போது தேரின் மேல் பகுதியில் தேர் சட்டங்கள் கட்டி பூ மாலைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். 

இதற்கான தேர் சட்டங்கள் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். தற்போது விழா தொடங்கியதையடுத்து தேர் சட்டங்களை வெளியே எடுத்து அடுக்கி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த தேர் சட்டங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதைகண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர், இதுகுறித்து தேவசம்தொகுதி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். 

இதுதொடர்பாக சிவகுற்றாலம் கூறும் போது, தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் எங்களை தொடர்பு கொண்டு, தீ விபத்து ஏற்பட்ட கோவிலுக்கு சென்று பார்வையிட்டு, சேதமடைந்த தேர்சட்டங்களுக்கு பதிலாக புதிய தேர்சட்டங்களை தயார் செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார். அதன்படி புதிய தேர் சட்டங்கள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்றார்.

Next Story