6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விவசாயிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை - கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விவசாயிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை - கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 4:00 AM IST (Updated: 1 Feb 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த 31.8.2018 அன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளியை சேர்ந் த விவசாயி மஞ்சு என்கிற மஞ்சுநாத் (வயது 35) என்பவர் வந்தார்.

அப்பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி விசாரணை நடத்தி, மஞ்சு என்கிற மஞ்சுநாத்தை கைது செய்தார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கிரு‌‌ஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக மஞ்சு என்கிற மஞ்சுநாத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story