திருத்தங்கல் அருகே, அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து


திருத்தங்கல் அருகே, அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 1 Feb 2020 3:45 AM IST (Updated: 1 Feb 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல் அருகே அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.

திருத்தங்கல்,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சுக்கிரவார்பட்டி - எம்.புதுப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அட்டை மில் உள்ளது.

இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சிவகாசி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து மில்லில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு ஊழியர்கள் அட்டை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

பின்னர் மின்வாரிய பராமரிப்பு பணி முடிந்து மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது மில் வளாக பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென அங்கிருந்த அட்டைகளில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் மில்லில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் அட்டைகள், கழிவுகள் முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது. தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் எரிந்த பொருட்களின் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story