திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் பாஸ்கரன் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து பாஸ்கரன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story