தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம் 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் பங்கேற்பு
தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் இந்த யாகசாலை பூஜையில் பங்கேற்று உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 5-ந் தேதி(புதன்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைக்காக மொத்தம் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களுக்கு என 3 பாகங்களாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் சிவாச்சாரியார்கள், யாக சாலை பூஜைக்கான பொருட்கள் கொண்டு செல்வதற்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கால யாகசாலை பூஜை நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
முதல் கால பூஜை
முன்னதாக மாலை 3 மணிக்கு மகந்யாசபூர்வக ஏகாதச ருத்ரஜபம், ருத்ராபிஷேக பூர்வக பிரசன்னாபிஷேகம், சூர்ய அக்னி ஸங்கிரஹணம், கும்பலங்காரம், தேவதாகலாகர்ஷணம் நடந்தது. அதைத்தொடர்ந்து இஷ்டதானம், தசதானம், பஞ்சதானம், யாத்ராதானம், யாத்ராஹோமம் நடந்தது.
பின்னர் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜை நிறைவில் ஜபம் ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
332 சிவாச்சாரியார்கள்- 80 ஓதுவார்கள்
சுவாமிக்கு 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உத்தமபக்த யாகசாலையில் 33 குண்டங்களும், 1 பிரதான வேதிகையும், அம்பாளுக்கு 2 ஆயிரத்து 116 சதுரஅடி பரப்பளவில் உத்தம மத்திமபட்சம் என்ற யாகசாலையும் அதில் 25 குண்டங்களும், ஸ்ரீசக்ர வேதிகையும் அமைக்கப்பட்டுள்ளன. பரிவார தெய்வங்களுக்கு 8 பஞ்சாகினி யாகசாலையும், 40 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யாகசாலையில் 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் அமர்ந்து யாகசாலை பூஜை நடத்தினர்.
இதில் தலைமை செயலாளர் சண்முகம், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை இளைய ஆதீனம் ஹரிகரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே மற்றும் கும்பாபிஷேக விழாக்குழுவினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
108 மூலிகை பொருட்கள்-பழங்கள்
இந்த யாகசாலை பூஜையில் வசம்பு, கருங்காலி, கருடன்கிழங்கு, மிளகு தக்காளி, இலுப்பை பூ, வலம்புரி, மருதாணிவிதை, சாரணை வேர், தாமரைகிழங்கு, மாவிளங்கம் பட்டை, அசோகப்பட்டை, பூதாளப்பட்டை, நிலவேம்பு, ஆடாதொடா இலை, ஆடுதின்னாபாலை, வேப்பம்பூ, ஆவாரம்பூ, நீலிஅவுரி இலை, ஊமத்தை விதை, கடுக்காய், புரசன்விதை உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, கொய்யாப்பழம் உள்ளிட்ட பழவகைகளுடன், நவதானியங்களும் யாக சாலையில் போட்டு சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் பூஜைசெய்து வருகின்றனர். யாகசாலை பூஜையின்போது தேவாரம், திருவாசகம் பாடப்படுகிறது.
2,600 கிலோ மூலிகை பொருட்கள்
ஒருகால யாகசாலை பூஜைக்கு ஒரு குண்டத்துக்கு 3 கிலோ மூலிகைபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 8 கால யாகசாலை பூஜைக்கும் சேர்த்து 2,600 கிலோ மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
சாரை, சாரையாக பக்தர்கள்
இன்று(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை(திங்கட்கிழமை) 4, 5-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி 6, 7-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந் தேதி அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.
யாகசாலை பூஜையையொட்டி பக்தர்கள் சாரை, சாரையாக நேற்று மாலை முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு யாக சாலையை சுற்றிப்பார்த்தபடி வெளியேறினர்.

Related Tags :
Next Story