மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை + "||" + Bank employees protest demanding cancellation of new pension scheme

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தஞ்சையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

20 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட வங்கித்துறையை சேர்ந்த 9 தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.


2-வது நாள் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 350 வங்கி கிளைகளில் பணியாற்றும் 3,200 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன. பின்னர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தஞ்சை ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வங்கி பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். பணி ஓய்வு பணப்பயன்களில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக ரூ.600 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்த போராட்டத்தினால் ஓய்வூதியர்கள், வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபிரியர்கள் கடையை திறக்க வலியுறுத்தி மது பிரியர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடையை மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் 300 பேர் மீது வழக்கு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
செந்துறை அருகே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருமானூர் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.