மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது + "||" + Arrest master arrested in Namakkal youth murder case

நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது

நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது
நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
நாமக்கல்,

நாமக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள குட்டையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


விசாரணையில் இந்த கொலை வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த விமல் (வயது 20), மின்னாம்பள்ளியை சேர்ந்த கரடி மணி என்கிற மணிகண்டன் (20) உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கட்டிட மேஸ்திரி கைது

இந்த நிலையில் விமல் மற்றும் 3 சிறுவர்களை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். கட்டிட மேஸ்திரி கரடிமணி என்கிற மணிகண்டனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று புதன்சந்தை பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மணிகண்டனை நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கொலையான நபர் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்
திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2. கூலிப்படையை ஏவி போலி டாக்டரை கொன்றது அம்பலம் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது
திருமங்கலம் அருகே போலி டாக்டர் கொலை வழக்கில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கடனை திருப்பி செலுத்தாததால் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
3. பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
அரகண்டநல்லூர் அருகே பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
4. 2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை: சமையல் தொழிலாளி கைது
வேலைக்கு செல்லும்படி மனைவி கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5. ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.