ஈரோட்டில் 606 மாணவிகளுக்கு சைக்கிள்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்
ஈரோட்டில் 606 மாணவிகளுக்கு சைக்கிள்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
ஈரோடு,
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், ேக.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 304 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள அடல் திறன் மேம்பாட்டு ஆய்வகத்தை அவர் திறந்து வைத்தார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த மனிதநேய வார நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
ஆய்வகம்
இந்த விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, கோபி கல்வி மாவட்ட அதிகாரி சிவக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி வாணிலட்சுமி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன்பிரித்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஈரோடு கலைமகள் கல்வி நிலைய மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 302 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். மேலும், இடையன்காட்டுவலசில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கூடத்தில் அடல் திறன் மேம்பாட்டு ஆய்வகத்தை அவர் திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story