நெல்லை அருகே, செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்


நெல்லை அருகே, செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 1:31 AM GMT)

நெல்லை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி சிவாஜிநகர் அருகே உள்ள சைமன்நகரில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், செல்போன் கோபுரம் அமையும் இடத்தில் குழி தோண்டி கட்டுமான பணியை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது..

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த இடத்தில் ஒன்று திரண்டனர்.

செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமானப்பணி நடந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், வேலை எதுவும் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story