கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 4 மாதங்களில் 5 டி.எம்.சி. தண்ணீர்
கண்டலேறு அணையில் இருந்து 4 மாதங்களில் பூண்டி ஏரிக்கு 5.064 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி , புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீீரை கொண்டு சென்னையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.
அதன்படி கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீீர் திறந்து விடப்பட்டது. தற்போது வினாடிக்கு 3 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணிக்கு நீர் மட்டம் 29.42 அடியாக பதிவானது.
1,609 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் வரத்து வினாடிக்கு 429 கனஅடியாக இருந்தது.
கடந்த 4 மாதங்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 5.064 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story