நெல்லை அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி


நெல்லை அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊற்றடி பகுதியைச் சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சிந்தியா. இவர்களுடய மகள் விபி‌ஷாஸ்ரீ (7), மகன் நவீன் சுதேந்தர் (4). விபி‌ஷாஸ்ரீ அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே சிந்தியா, அவளை வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அவளுக்கு காய்ச்சல் குறையவில்லை.

பரிதாப சாவு

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக விபி‌ஷாஸ்ரீ யை நாகர்கோவில் அருகில் உள்ள வெள்ளமடம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்ததில், டெங்கு அறிகுறி காணப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விபி‌ஷாஸ்ரீக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவள் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தாள். இச்சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story