மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை + "||" + Poison in childless longing Drunk girl commits suicide

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவருடைய மனைவி வள்ளியம்மாள் (30). இவர் மூலனூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் ராமசாமிக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை. எனவே குழந்தைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வள்ளியம்மாள் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குழந்தை இல்லை என்பதால் வள்ளியம்மாள் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்தை கணவரிடம் கூறி, வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனாலும் 2-வது திருமணம் செய்துகொள்ள ராமசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.


சாவு

இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளியம்மாளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி, வள்ளியம்மாளை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போதுதான், கண்வலி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வள்ளியம்மாளுக்கு தாராபுரம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வள்ளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் இறந்தார். இது குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிளஸ்-2 மாணவி தற்கொலை இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் விபரீத முடிவு
குழித்துறை அருகே இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. சேலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. கடிதம் எழுதி வைத்துவிட்டு வனக்காவலர் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது
சாக்கோட்டை அருகே வனக்காவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
4. கடன் தொல்லையால் விபரீதம்: ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
கடன் தொல்லையால் விபரீதமாக ஓட்டல் தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
5. ஏர்வாடி மீனவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வாரணாசியில் தற்கொலை - தங்கம் கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு திருப்பங்கள்
ஏர்வாடி பகுதியை சேர்ந்த மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கோடாங்கி ராமநாதன் என்பவர் வாரணாசியில் தற்கொலை செய்து கொண்டார். தங்கம் கடத்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.