பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து சுற்றுலா பயணிகள் குளியல்
பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்துச் செல்கிறார்கள்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்கு உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் வந்து குளித்து செல்வார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கழித்துதான் அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் பகுதிகளில் பெய்த மழையால் அருவிகளில் தற்போது நீர்வரத்து உள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுமாராக தண்ணீர் விழுந்து வருகிறது. பழைய குற்றாலம் அருவியில் மிதமான நீர் விழுந்து வந்தது. பாசனத்திற்கு பழைய குற்றாலம் அருவியில் மீது இருந்து தண்ணீர் பிரித்து விடப்பட்டது.
சுற்றுலா பயணிகள் குளியல்
தற்போது பாசனத்திற்கு போதிய தண்ணீர் இருப்பதால் அதை அடைத்து அருவியில் தண்ணீர் விழ ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவியில் குளித்து செல்கிறார்கள்.

Related Tags :
Next Story