குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை ஒத்தக்கடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
புதூர்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கட்சி தலைமையில் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதையொட்டி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை ஒத்தக்கடையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற் றார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய கலாநிதி, ஒன்றிய செயலாளர் ரகுபதி, சிறைசெல்வம், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் பாலாஆண்டி, ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ்குமார் என்ற ஆண்டி , ஊராட்சி தலைவர்கள் நரசிங்கம் ஆனந்த், திருமோகூர் அண்ணாமலை, யூனியன் தலைவர்கள் கிழக்கு மணிமேகலை, மேற்கு வீரராகவன், துணைத்தலைவர் கார்த்திகேயன், அணி நிர்வாகிகள் நேருபாண்டி, நாகனாகுளம் பேங்க் காலனி சசிகுமார், வடிவேலு, மலைச்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கையெழுத்து இயக்கம்
மதுரை கோ.புதூர் பஸ் நிலையத்தில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, ரவிக்குமார், மாநகர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் குழந்தைவேலு, ஜெயராம்,சின்னம்மாள்,பொன்.சேதுராமலிங்கம் மற்றும் ம.தி.மு.க. பூமிநாதன், காங்கிரஸ் கார்த்திகேயன் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர். சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்களிடம் 87-வது வார்டு தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் திருமுருகன், ராஜ்பிரதாப் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Related Tags :
Next Story