கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி கோவையில் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி கோவையில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர்அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

நெல்லைமாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் கடன் தொல்லையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து கோவை கலெக்டர்அலுவலகத்தில்குறைதீர்க்கும்கூட்டம் நடைபெறும்நாட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுவழக்கம்.கோவை கலெக்டர்அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அவர்கள் மனு கொடுக்க வரும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகம் வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் மதியம் சுமார் 12.30 மணிக்கு ஆட்டோவில், தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஒருவாலிபர் கலெக்டர்அலுவலகம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திய அவர் திடீரென்று ஆட்டோவில் ஒருகேனில்மறைத்து வைத்திருந்தமண்எண்ணெயை எடுத்து தனதுஉடலில் ஊற்றினார். இதனைக்கண்டபொதுமக்கள் பயத்தில் சத்தம் போட்டனர்.

இதனால் உஷார் அடைந்தபோலீசார்ஆட்டோவை நோக்கிஓடிவந்தனர். ஆனால்போலீசார்வருவதை கண்டஅந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஓடினார். மேலும் கையில் வைத்திருந்த தீப்பெட்டியைஎடுத்து தீக்குச்சியை உரசி உடலில் தீ பற்ற வைக்க முயன்றார். அப்போது அங்கிருந்தஆம்புலன்ஸ்டிரைவர்பாலாஜி, மற்றும் ஒரு போலீஸ்காரர் துணிச்சலாகஅவரை பிடித்துகையில் இருந்த தீப்பெட்டியை பறித்தனர்.இந்த சம்பவத்தால்அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடன் தொல்லை

பின்னர் போலீசார் அவரை பிடித்துரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம்அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த வினோத்(வயது 30)என்பது தெரியவந்தது. மேலும் அவர் கலெக்டரிடம்கொடுப்பதற்காகவைத்திருந்த மனுவில் கூறப்பட்டுஇருந்ததாவது:-

என் நண்பர்கள்எனக்கு துரோகம்செய்து விட்டனர். மேலும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதுடன், கடன் தொல்லையும் உள்ளது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. எனக்கு உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் எதிர்காலத்தை மனதை கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

உடல் உறுப்புகள் தானம்

நான் இறந்த பின்னர் எனது குழந்தைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் நல்ல கல்வி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உடல்உறுப்புகளை தானம் செய் கிறேன். என் உடலைஎரித்து கிடைக்கும்சாம்பலில் பூச்செடி நடவேண்டும்.செல்போனில் உள்ளவீடியோ, புகைப்படங்களைவைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

போலீசாரின்பலத்த சோதனையும் மீறி கலெக்டர்அலுவலக வளாகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை கலெக்டர்அலுவலகத்தில் அடிக்கடி தீக்குளிப்பு முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், பொதுமக்கள் கொண்டு வரும்குடிநீர் பாட்டில்கள், கைப்பை என அனைத்தையும்போலீசார்சோதனை செய்கின்றனர்.இருப்பினும்இதுபோன்ற தீக்குளிப்பு முயற்சிகள்தொடர்வதாக பொதுமக்கள்தெரிவித்தனர்.

Next Story