காஞ்சீபுரம் நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை


காஞ்சீபுரம் நினைவு இல்லத்தில்   அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2020 3:54 AM IST (Updated: 4 Feb 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது நினைவு நாளையொட்டி சிலைக்கு அமைச்சர் பா.பெஞ்சமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சீபுரம்,

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டதையொட்டி, காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் அண்ணா நினைவு நாளையொட்டி, முத்தியால்பேட்டையில் அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.ஜோதியம்மாள், பிரேமா ரஞ்சித்குமார், ஆர்.வி.உதயன், குமார் உள்பட பலரும் அண்ணா படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.வினர் மரியாதை

மேலும், சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், நிர்வாகி சி.வி.எம்.பி.சேகரன், நகர செயலாளர் கே.ஆறுமுகம், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாநில நெசவாளரணி நிர்வாகி தி.அன்பழகன் உள்பட பலர் சென்று மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் தி.மு.க.வினர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story