பல்வேறு துறை அதிகாரிகளுடன் பட்ஜெட் குறித்து எடியூரப்பா ஆலோசனை தயாரிப்பு பணிகள் தீவிரம்
கர்நாடக பட்ஜெட் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
2020-21-ம் ஆண்டிற்கான கர்நாடக அரசின் பட்ஜெட் அடுத்த மாதம்(மார்ச்) 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் துறை வாரியாக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவக்கல்வி, போக்குவரத்து, தோட்டக்கலை, வீட்டு வசதி, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா, முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது? எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டு இருக்கிறது? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
குறித்த காலக்கெடு
வருகிற பட்ஜெட்டில் துறைகளுக்கு தேவையான திட்டங்கள், நிதி ஆகியவை குறித்தும் எடியூரப்பா விவரங்களை கேட்டு பெற்றார். மேலும் முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளை விரைவாக குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story