தாதர் ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பயணியை தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய போலீஸ்காரர்
ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பயணியை ரெயில்வே போலீஸ்காரர் தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றி உள்ளார்.
மும்பை,
மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று ரெயில்வே போலீஸ்காரர் படலே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்த அங்கித்(வயது25) என்ற பயணி திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்.
இதைப்பார்த்த போலீஸ்காரர் படலே அந்த பயணியை உடனடியாக பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் பிளாட்பாரத்திற்கு தூக்கி வந்தார்.
தோளில் தூக்கி சென்றார்
அதன்பிறகு ஸ்டெச்சருக்காக காத்திருக்காமல் போலீஸ்காரர் படலே, மயங்கிய நிலையில் இருந்த பயணியை தனது தோளில் தூக்கிய படி நடைமேம்பாலம் வழியாக ரெயில் நிலையத்துக்கு வெளியே வந்தார். பின்னர் ஆம்புலன்சை அங்கு வரவழைத்து அவரை ஏற்றி சிகிச்சைக்காக சயானில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதால் மயங்கி விழுந்த பயணி அங்கித் காப்பாற்றப்பட்டார்.
ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பயணியை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய போலீஸ்காரர் படலேயை ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story