கலெக்டர் ஆய்வு
கொளத்தூர் ஊராட்சியில் உள்ள குப்பை கிடங்கை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் உள்ள குப்பை கிடங்கை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். மேலும் இந்த குப்பை கிடங்கில் பரங்கி மலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் போன்ற ஊராட்சிகளிலும், குன்றத்தூர் 8 ஊராட்சி, பரங்கிமலை 8 ஊராட்சி திருப்போரூர் 7 ஊராட்சி, காட்டாங்கொளத்தூர் 6 ஊராட்சி மற்றும் பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் உள்ள குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் இந்த குப்பைகளை அகற்றுவது குறித்து அரசு துறை அலுவலர்கள் ஆலோசனை கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story