உலக புற்றுநோய் தின விழா கவர்னர் கிரண்பெடி பங்கேற்பு
அரியூரில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழாவில் கவர்னர் கிரண்பெடி பங்கேற்றார்.
திருபுவனை,
பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக்குழுமத்தின் சார்பில் உலக புற்றுநோய் தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு ராமச்சந்திரா கல்விக்குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புற்றுநோயாளிகளின் நலனுக்காக தலைமுடி தானம் வழங்கிய கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், பெண் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.
சென்னை புற்றுநோய் மறுவாழ்வு மையத்தின் நிறுவனர் நடிகை கவுதமி கலந்துகொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். விழாவில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் மகாதேவன், டீன் ரத்தினசாமி மற்றும் நிர்வாக அதிகாரிகள் கல்லூரி முதல்வர்கள், டாக்டர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மனிதவள அதிகாரி லலிதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story