9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்


9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை    சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 5 Feb 2020 3:45 AM IST (Updated: 5 Feb 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த, 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அவளது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

பீதர்,

பீதர் மாவட்டம் அவுராத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் சுப்ரியா (வயது 14). இவள் பீதர் புறநகரில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். மேலும் பள்ளியின் அருகே உள்ள விடுதியில் சுப்ரியா தங்கி இருந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்ரியா விடுதி அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பீதர் புறநகர் போலீசாருக்கு விடுதி வார்டன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பீதர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இந்த நிலையில் சுப்ரியா தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த அவளது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சுப்ரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில் சுப்ரியாவின் பெற்றோர் பீதர் புறநகர் போலீசில் ஒரு புகார் அளித்து உள்ளனர். அதில் எங்கள் மகள் சுப்ரியாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவளுக்கு சில ஆசிரியர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். இதுபற்றி எங்களிடம் ஏற்கனவே சுப்ரியா தெரிவித்து இருந்தாள். இதன்காரணமாக சுப்ரியாவை ஆசிரியர்களே அடித்து கொலை செய்து தூக்கில் ெதாங்கவிட்டு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story