தண்டவாள பராமரிப்பு பணி: நெல்லை வழியாக இயக்கப்படும் ரெயில் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: நெல்லை வழியாக இயக்கப்படும் ரெயில் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:15 PM GMT (Updated: 4 Feb 2020 8:15 PM GMT)

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் ரெயில் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

மதுரை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி வரை நெல்லை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் 25-ந் தேதி வரை (வியாழக்கிழமை தவிர) திருப்பரங்குன்றம்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரெயில் 11-ந்தேதி சாத்தூர்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்.

நெல்லையில் இருந்து திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறைக்கு இணைந்து செல்லும் பாசஞ்சர் ரெயில் 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, மார்ச் மாதம் 2, 4 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்-திருச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் 10, 11, 14, 15, 17, 18, 21, 22, 24, 25-ந் தேதிகளில் சாத்தூர் -நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையேயும், 12, 16, 19, 23-ந் தேதிகளில் மதுரை-நெல்லை இடையேயும் இருமார்க்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் வண்டி எண் 56734, 56735 மதுரை-செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரெயில்கள் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதில் வியாழக்கிழமை மட்டும் வழக்கம் போல் ரெயில் ஓடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story