மாவட்ட செய்திகள்

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தம் + "||" + LIC condemns sale of shares Staff strike for 1 hour

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தம்

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தம்
பங்குகளை தனியாருக்குவிற்கும் முடிவை கண்டித்து ஊட்டியில்எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம்வேலைநிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டனர்.
ஊட்டி,

கடந்த 1-ந்தேதி மத்தியபட்ஜெட்டில்எல்.ஐ.சி. (ஆயுள்காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குவிற்கப்படும்என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம்வேலைநிறுத்த போராட்டம்நடத்தப்படும்என்றுஅறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டிஎல்.ஐ.சி. அலுவலகத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை 1 மணி நேரம் அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


12 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிகாரிகள், ஊழியர்கள் வளாகத்தில் ஒன்று கூடினர். அங்குஎல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குவிற்கப்படும்என்ற முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்தியஇன்சூரன்ஸ்ஊழியர்கள்சங்க கிளைதலைவர்கோபால்தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்தியபட்ஜெட்டில்எல்.ஐ.சி. பங்குகள் தனியாருக்குவிற்கப்படும்என்ற அறிவிப்பை திரும்பபெறக்கோரிகோ‌‌ஷங்கள்எழுப்பப்பட்டது.

பணிகள் பாதிப்பு

அலுவலகநுழைவுவாயிலில்1 மணி நேரம் வேலைநிறுத்தம் குறித்தநோட்டீஸ்ஒட்டப்பட்டு இருந்தது.வேலைநிறுத்த போராட்டத்தால்அலுவலகத்தில் பணம் செலுத்தும்கவுண்ட்டர், ஊழியர்கள் பணிபுரியும் பகுதி வெறிச்சோடி இருந்தது. இதனால்காப்பீட்டுத்தாரர்கள்பிரீமியம்செலுத்துவது, கடன் பெறுவது உள்ளிட்ட பணிகள்பாதிக்கப்பட்டன. ஊட்டியில்எல்.ஐ.சி.முதல்நிலைஅதிகாரிகள் சங்கத்தினர், கிளை மேலாளர்ஆனி பால், 17 ஊழியர்கள், 400 முகவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேபோல் குன்னூர், கூடலூர்எல்.ஐ.சி. அலுவலகங்களில் ஊழியர்கள்வேலைநிறுத்த போராட்டம்செய்தனர்.

இதுகுறித்து அகில இந்தியஇன்சூரன்ஸ்ஊழியர்கள்சங்க கிளைசெயலாளர்தினே‌‌ஷ்கூறும்போது, மத்தியபட்ஜெட்டில்எல்.ஐ.சி. நிறுவனத்தின்பங்குகளை தனியாருக்குவிற்பதற்காகவெளியிடப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.எல்.ஐ.சி.யில்ஏராளமானகாப்பீட்டுத்தாரர்கள்உள்ளனர். முகவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.எல்.ஐ.சி. மூலம் இறப்பு மற்றும்முதிர்வு தொகை சரியானமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. தனியாருக்கு விற்றால்போனஸ்செலுத்துவது பாதிக்கும். எனவே, மத்தியஅரசு தனதுமுடிவை கைவிடும் வரைதொடர் போராட்டங்கள்நடத்தப்படும்என்றார்.

கூடலூர்

அகில இந்தியஇன்ஸ்சூரன்ஸ்ஊழியர்சங்க கூடலூர்கிளை சார்பில்நடைபெற்றபோராட்டத்துக்கு சங்க தலைவர்சிவக்குமார்தலைமை தாங்கினார். செயலாளர்பாலசுப்பிரமணி, பொருளாளர்மணிவண்ணன்உள்பட பலர் கலந்து கொண்டுகோ‌‌ஷங்களைஎழுப்பினர்.

இதுகுறித்து சங்க தலைவர்சிவக்குமார்கூறியதாவது:-

எல்.ஐ.சி.பங்குகளை தனியாருக்குவிற்கப்படும்என மத்திய நிதித்துறை அமைச்சர்நிர்மலாசீதாராமன்அறிவித்துள்ளார். ஆண்டுக்குரூ.2 ஆயிரத்து 611 கோடி லாபம் ஈட்டி மத்திய அரசுக்குஎல்.ஐ.சி. வழங்கி வருகிறது. இதன்பங்குகளை தனியாருக்குவழங்குவதால்லாப தொகைதனியாரிடம்செல்லும் நிலை உள்ளது. மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும். கிடைக்கும் லாபத்தை கொண்டு மக்களின்சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே மத்தியஅரசு பங்குகளைவிற்பதை கைவிடவேண்டும்.

இதை வலியுறுத்தி முதற்கட்டமாக 1 மணி நேரம் மட்டும் வேலைநிறுத்த போராட்டம்நடைபெற்றது. அடுத்தகட்ட போராட்டம்குறித்து ஆலோசித்து முடிவுஎடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ரூ.1,200 கோடி நிலுவை தொகையை நிர்வாகம் வழங்க கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம்
ரூ.1,200 கோடி நிலுவை தொகையை நிர்வாகம் வழங்க கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. வருகிற 27-ந்தேதி வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் 27-ந்தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
5. கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார இயக்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் சட்டசபை அருகே உள்ள நலவழி மற்றும் குடும்பநலத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.