பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்: உடுமலையில் ஜி.கே.வாசன் பேட்டி
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
போடிப்பட்டி,
உடுமலையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில் இந்தியப்பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலையைப் படிப்படியாகக் குறைக்க மத்திய அரசின் பட்ஜெட் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. விவசாயம் மற்றும் சிறு,குறு தொழில்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரம், கட்டுமானப்பணிகள், வர்த்தக மேம்பாடு, மகளிர் மேம்பாடு மற்றும் விவசாயிகளுக்கான பல திட்டங்களுடன் பொருளாதார உயர்வை உறுதிப்படுத்தக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது.
மேலும் தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது வரவேற்க வேண்டியது. இனிவரும் காலங்களில் எல்லா விழாக்களிலும் இது தொடர வேண்டும். அத்துடன் குரூப்- 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் அரசு உறுதிப்படுத்தவேண்டும்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவிலும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரளாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வருகிறார்கள். எனவே தமிழக எல்லையில் மருத்துவக்குழு அமைத்து கண்காணிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடுமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பஸ் நிலையம் விரிவாக்கம், வாரச்சந்தை மேம்பாடு, சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத்தவிர்க்க கடைகள் தள்ளுவண்டிக்கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் சம்பா நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து ஆயக்கட்டுப்பகுதிகளிலும் மாநில நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரியல் பூஞ்சாணம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் வனத்திலிருந்து 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் ஊடுருவி பயிர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.ஐ.சி., பி.பி.எப்., வீட்டுக்கடன் முதலீடுகளில் வழங்கப்படும் 80சி வரி தள்ளுபடிக்கு மாற்றாக புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்.ஐ.சி.யில் முதலீடு குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே 80சி க்கான ரிப்பீட் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்.
ஆனைமலையாறு திட்டத்தை செயல்படுத்தி பி.ஏ.பி. விவசாயிகளுக்கு 3.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்தனர். இ்வ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story