சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்க திடலில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சி.பரமேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர்கள் சிவஞானம், ராஜேஸ்வரி, இளஞ்சியம், உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாண்டியம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்த கூட்டத்தில், பி.ஐ.சி.எம்.இ., எம்.ஆர்.எம்.பி.எஸ். போன்ற மென்பொருளை எளிமையாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு பண பயன்கள் எளிமையாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை கலைத்திட வேண்டும். சமுதாய சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துறை ரீதியான பணிச்சுமைகளை குறைத்திட வேண்டும்.
வட்டார சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணைத்தலைவர் செல்வி, பொருளாளர் (பொறுப்பு) செந்தமலர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து ெகாண்டார்கள்.

Related Tags :
Next Story