காஞ்சீபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


காஞ்சீபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:45 AM IST (Updated: 6 Feb 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பாவாபேட்டைத் தெருவை சேர்ந்தவர் ஓயப்பன் (வயது 52). இவர் வீதி வீதியாக சென்று உணவகங்கள், கடைகளுக்கு பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காஞ்சீபுரம் நகராட்சிக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பா.முத்து, சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், இக்பால் ஆகியோர் ஓயப்பன் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் ஆகியவை அதிக அளவில் இருந்தது தெரிந்தது. அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர்.

Next Story